வயதாவதை தாமதப்படுத்தும் மருந்து: கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் புதிய சாதனை.

Date:

வயது முதிர்வை தாமதப்படுத்தும் இயற்கை மருந்து ஒன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த விடயம் தொடர்பாக  கொழும்பு பல்லைக்கழகத்தின் உயிரியல் இரசாயனம், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி பேராசிரியர் சமீர ஆர் சமரகோன் தெரிவித்துள்ளார்.

இந்த மருந்து இயற்கை மூலக்கூறுகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வருவதாக கொழும்பு பல்லைக்கழகத்தின் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஆராய்ச்சிகளின் பின்னர், தற்போது அந்த மருந்தை தயாரிக்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரியல் இரசாயனம், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள யுனிவர்சிட்டி பிஸ்னஸ் லிங்கேஜ் ஊடாக, தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து மிக விரைவில் இந்த மருந்தை சந்தைக்கு கொண்டு வரவுள்ளதாக ஆராய்ச்சிகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது.

Popular

More like this
Related

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...