வீட்டுத்தோட்டம் அமைக்குமாறு பொதுமக்களிடம் விவசாய அமைச்சர் கோரிக்கை

Date:

இலங்கையில் மரக்கறிகளின் விலை உயர்வைத் தணிக்க வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பெய்த கடும் மழையினால் பல மரக்கறி தோட்டங்கள் அழிவடைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தற்போது மரக்கறிகளுக்கு அதிக விலை அறவிடப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர் கனமழையால் இதுபோன்ற நிலை ஏற்படும் என முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தேன்.

எனவே, மிளகாய், தக்காளி, பல்வேறு கீரைகள் போன்ற அடிப்படைத் தேவைகளைக் கொண்ட வீட்டுத் தோட்டத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்துமாறு பொதுமக்களை அமைச்சர் ஊக்குவித்துள்ளார்.

விலைவாசி உயர்வுக்காக என்னையும், விவசாய அமைச்சையும் பலர் திட்டுகிறார்கள்.

கனமழையால் மரக்கறி தோட்டங்களில் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது,” என்றார்.

இதற்கு தீர்வாக வீட்டுத் தோட்டத்தை பராமரிப்பதில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டுமென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...