2023 இல் 13.5 மில்லியனுக்கும் அதிகமானோர் உம்ரா யாத்திரை!

Date:

2023 ஆம் ஆண்டில் 13.5 மில்லியனுக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் உம்ரா யாத்திரையை மேற்கொண்டதாக சவூதி அரேபியாவைத் தளமாகக் கொண்ட அல்-அரேபிய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு உம்ரா யாத்திரையை அதிகளவான சர்வதேச யாத்ரீகர்கள் மேற்கொண்டதாக சவூதி அரேபிய இராச்சியத்தின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்ஃபிக் அல்-ரபியா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு யாத்ரீகர்களின் எண்ணிக்கை 58 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அதன் முந்தைய ஆண்டை விட (2022) மொத்தம் 5 மில்லியன் யாத்ரீகர்கள் வருகை தந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உம்ரா என்பது சவூதி அரேபியாவில் உள்ள மாக்காவுக்கு இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஒரு புனித யாத்திரையாகும்.

இது குறிப்பிட்ட திகதிகளைக் கொண்ட ஹஜ் யாத்திரையினை போலன்றி, ஆண்டின் எந்த நேரத்திலும் மேற்கொள்ளப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...