47-வது சென்னை புத்தகக் காட்சியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!

Date:

பபாசியின் 47-வது புத்தகக் காட்சியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

விழாவில் 6 பேருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரிலான பொற்கிழி விருதுடன், தலா ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டது.

அதனுடன் பபாசி சார்பில் பதிப்பகச் செம்மல் விருது உட்பட சிறப்பு விருதுகள் 9 பேருக்கு வழங்கப்பட்டது. இவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்த புத்தகக் காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரையும், வேலை நாட்களில் மதியம் 2 முதல் இரவு 8.30 மணி வரையும் நடத்தப்படும். கண்காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பபாசியில் உறுப்பினராக இல்லாமல் விண்ணப்பித்த அனைவருக்கும் இந்தாண்டு 150-க்கு மேலான அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

விழாவில் அமைச்சர் உதயநிதி, முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்துக் கடிதத்தைப் படித்தார்.

அதில், “இந்த 47-வது புத்தக காட்சி மிகப்பெரிய வெற்றி அடையவும், அதிக அளவிலான புத்தகங்கள் விற்பனையாகவும் நான் வாழ்த்துகிறேன். இன்னும் சில ஆண்டுகளில் 50-வது ஆண்டு புத்தக காட்சி நடைபெற போகிறது.

இது வாசிப்பின் மீதும், அறிவுத் தேடலின் மீதும் மற்றும் பகுத்தறிவாலும், முற்போக்கு சிந்தனையுடனும் தமிழ்ச் சமுதாயம் முன்னோக்கி நடைபோடுவதன் அடையாளம்.

எனவே, அந்த பணியைத் தொடர்ந்து மேற்கொண்டுவரும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த சங்கத்தின் தலைவர் கவிதா சொக்கலிங்கம் மற்றும் உள்ள பொறுப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

புத்தகம் வெளியிடுவது, பதிப்பிப்பது, விற்பனை செய்வது பிற தொழில்களைப் போன்றது அல்ல. அது அறிவுத் தொண்டு. தமிழ் ஆட்சியும், தமிழர்களின் ஆட்சியும் நடைபெறும் நம்முடைய தமிழகத்தில் இத்தகைய அறிவுத் திருவிழாக்கள், தமிழ்த் திருவிழாக்கள் அதிகம் நடக்க வேண்டும்.

, பபாசியின் விருது பெற்றுள்ள பிற படைப்பாளிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். வாசிப்பு பழக்கம் என்பது ஒரு தனிமனிதனின் அறிவுதரத்தின் அடையாளம் மட்டுமல்ல. ஒரு சமூகம், மாநிலம், நாடு எந்தளவுக்கு வளர்ந்துள்ளது என்பதற்கான அடையாளம்.

அறிவாற்றலை வாழ்நாள் எல்லாம் போற்றுகின்ற அரசாக, நமது திராவிட மாடல் அரசு இருக்கிறது. அதனால்தான், கருணாநிதி சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கினார்.

நாம் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கி உள்ளோம். புத்தகங்கள் மேல் எந்தளவுக்கு அக்கறையும், ஆர்வமும் கொண்டவர்கள் நாங்கள் என்பதற்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு” என்று கூறப்பட்டிருந்தது.

Popular

More like this
Related

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...