47 ஆவது சென்னைப் புத்தகக்காட்சி ஜனவரி 3ம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை சென்னை நந்தனம் வை.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்புத்தகக்காட்சியை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
புத்தகக் காட்சியின் 5 ஆவது நாளையொட்டி இன்று (07) மாலை 6 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது.
‘மகிழ்ச்சி தருவது நேற்றைய நினைவுகளே! நாளைய கனவுகளே’ என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா அவர்கள் நடுவராகப் பங்கேற்கவுள்ளார்.