CEB தொழிற்சங்கங்களின் விசேட கலந்துரையாடல் இன்று!

Date:

மின்சார சபை ஊழியர்கள் குழு ஒன்றின் பணி இடைநிறுத்தத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் இன்று (22) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்களின் தலைமையில் நடைபெறும் இந்த கலந்துரையாடலில் நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்குபற்ற உள்ளன.

இந்த கலந்துரையாடல் இன்று காலை 9 மணிக்கு மருதானையில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, இன்று காலை 7 மணிக்கு இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக கையேடு விநியோகம் செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்கவும் தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இன்று நண்பகல் 12 மணிக்கு இலங்கை மின்சார சபையின் தலைமையகத்திற்கு முன்பாக சிவில் அமைப்புக்கள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...