“சென்னை புத்தக கண்காட்சி 2024” நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அனைத்து வகையான புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் புத்தக கண்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி படிக்கும் கதைகள், நாவல்கள், இலக்கியம் சார்ந்த நூல்கள், ஆங்கில புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகங்கள், மொழி பெயர்ப்பு நூல்கள் என பொக்கிஷ குவியல்கள் போல குவிந்து கிடக்கின்றது.
அந்த வகையில் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியும் மக்களிடம் நல்ல வரவேற்பையும், ஆதரவையும் பெற்றுள்ளது.
இங்கு இலட்சக்கணக்கான மக்கள் வருகை புரிவார்கள். புத்தகங்கள் சிறப்பு தள்ளுபடியுடன் விற்கப்படுவதால் புத்தக விரும்பிகள் இந்த கண்காட்சியை தவறவிடுவதில்லை.
இந்த நிலையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான சென்னை புத்தக கண்காட்சியில் ஆயிரக்கணக்கான பதிப்பகங்களின் இலட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
புத்தகக் கண்காட்சியை பாா்வையிட நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சுமாா் 1,000 அரங்குகள் இதில் இடம்பெறும்.
விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடைபெறும்.
மேலும் ஒவ்வொரு நாள் மாலையிலும், தமிழகத்தின் தலைசிறந்த அறிஞா்கள், எழுத்தாளா்களின் உரை இடம்பெறும்.