‘Yes or No’:நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து குறுஞ்செய்தி மூலம் அறிவிக்குமாறு வேண்டுகோள்!

Date:

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து பொது மக்களின் ஆலோசனைகளை பெறுவதற்கு சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் OSB ‘YES’ எனவும் இல்லை எனில் OSB ‘NO’ எனவும் பதிவிட்டு 0767 001 001 எனும் இலக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் திட்டமானது நேரடி ஜனநாயக முயற்சியின் ஒரு பகுதியாக எனவும், நாட்டு மக்கள் அரசாங்கத்தின் கொள்கைகளில் நேரடியாக வாக்களிப்பதற்கு அனுமதிக்கும் எனவும் நம்பப்படுகிறது.

இதனிடையே, எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், ஊழலுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கும் ஊடகவியலாளர்களை ஒடுக்கவும், தகவல் தொழில்நுட்பத் துறையை பாதிக்கவும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் பயன்படுத்தப்படலாம் என சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...