இலங்கை அணி பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: அனுமதி இலவசம்

Date:

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவசமாக காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

குறித்த போட்டியானது, இன்று (11) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், விளையாட்டரங்கில் சி மற்றும் டி பிரிவுகளிலுள்ள ஆசனங்களே இவ்வாறு ரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பார்வையாளர்கள் நுழைவதற்காக நுழைவு வாயில்கள் பிற்பகல் 01 மணிக்கு திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடைபெறவிருக்கும் t20 போட்டியைக் காண www.srilankacricket.lk மற்றும் பிரேமதாச மைதானத்திலும் பற்றுச்சீட்டுக்களை கொள்வனவு செய்ய முடியும்.

அத்துடன், காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை பற்றுச்சீட்டு கவுண்டர் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான...

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20)...

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...