இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் முக்கிய தளபதி கொலை: மத்திய கிழக்கு போராக விரிவடையும் அச்சம்

Date:

சொகுசு காரில் சென்ற ஹிஸ்புல்லாஹ்வின் முக்கிய தளபதியை குறிவைத்து  நிலையில் நேற்று இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் ஹிஸ்புல்லா தளபதி வாஸிம் அல்-தாவில் உயிரிழந்ததாக லெபனான் தெரிவித்துள்ளது.

காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹமாஸ்க்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.  இஸ்ரேலும் லெபனான் தெற்குப் பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

லெபனானின் தெற்குப் பகுதியில் ரகசியமாக செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லாஹ் குழுவின் தளபதியாக செயல்பட்டு வந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

இது ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஆத்திரமூட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஹிஸ்புல்லாவும் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல்- காசா இடையிலான சண்டை மத்திய கிழக்கு போராக விரிவடையும் என அச்சம் நிலவுகிறது.

இந்த நிலையில், ஹிஸ்புல்லா படையைச் சோ்ந்த முக்கிய தளபதி வாஸிம் அல்-தாவிலை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஸா போரில் இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவுப் படையினருக்கும் இடையே நடைபெறும் ஒவ்வொரு பரஸ்பர தாக்குதலும், இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான நேரடிப்போருக்கான வாய்ப்பை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 23 ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 23 லட்சம் மக்கள் தொகை கொண்ட காசாவில் இருந்து சுமார் 85 சதவீதம் பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...