எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

Date:

இன்று காலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிபேட்கோ அறிவித்துள்ளது.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை – 366 ரூபா.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை – 464 ரூபா.

ஒட்டோ டீசல் ஒரு லீட்டர் 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை – 358 ரூபா. சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 41 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை – 475 ரூபா. .ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 11 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை – 236 ரூபா.

இதேவேளை நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து பொது மக்கள் தமது வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பிச் சென்றதை காணமுடிந்தது. ஜனவரி முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...