கண்டி மாவட்டம் தெனுவர கல்வி வலயம் கடுகண்ணாவ குருகுத்தல முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ‘1987 O/L Batch’ பழைய மாணவர்களால் பாடசாலையில் இலவச வைத்திய முகாமொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த இலவச மருத்துவ முகாமை உடுநுவர ஆயுர்வேத சமூக மருத்துவ அதிகாரி Dr.Faaiq, Dr.Fawzul Hinaya, Dr.Muzammila ஆகியோரின் பூரண அனுசரணையுடன் இடம்பெற்றது.
மேலும் பல ஊர் மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்ற இந்நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்கு 1987 O/L Batch பழைய மாணவர்களும் உறுதுணையாக செயற்பட்டனர்.
இதேவேளை பாடசாலையில் கல்வி கற்று வைத்தியர்களாகிய மாணவர்களினாலே இந்த முகாம் நடத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.