இலங்கையின் பிரதான எரிவாயு விற்பனையாளரான லிட்ரோ கேஸ் தனது உள்நாட்டு எரிவாயுவின் விலையை அதிகரித்துள்ளது.
இந்த திருத்தப்பட்ட விலை இன்று முதல் அமுலுக்கு வரும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட எரிவாயு விலைகள் பின்வருமாறு;
* 12.5 கிலோ எரிவாயு:
உயர்த்தப்பட்டது – ரூ. 685
புதிய விலை – ரூ. 4,250
* 5 கிலோ எல்பி எரிவாயு:
உயர்த்தப்பட்டது – ரூ. 276
புதிய விலை – ரூ. 1,707
* 2.3 கிலோ எல்பி எரிவாயு:
உயர்த்தப்பட்டது – ரூ. 127
புதிய விலை – ரூ. 795