சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று ஜனவரி 11 ஆம் திகதி இலங்கைக்கு வருகைக்கு தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதியமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி தொடர்பான நடைமுறைப்படுத்தல் நிலைமைகளில் இலங்கை சாதகமான நிலையை எட்டியுள்ளதுடன், இது தொடர்பில் பின்பற்ற வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது.