சவூதி அரேபியாவில் இராஜதந்திரிகளுக்கு மட்டும் திறக்கும் முதல் மதுபானக் கடை

Date:

இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் மதுபானக் கடையை நாட்டின் தலைநகரான ரியாத்தில் திறக்கத் தயாராகி வருகிறது.

ஆனால் அங்கு யார் யாருக்கெல்லாம் மது கிடைக்கும் என்பது குறித்து வெளியான தகவல்கள் மிக முக்கியமானது ஆகும்.

இஸ்லாம் மதத்தின் படி மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சவூதி அரேபியாவில் மது அருந்துவதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன.

நூற்றுக்கணக்கான கசையடி தருவது, மது அருந்துவோரை நாடு கடத்துவது. அபராதம் அல்லது சிறைத்தண்டனை போன்றவற்றை அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் எதிர்கொள்கின்றனர்.

அதேநேரம் அண்மைக்காலங்களில் நடந்த சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, சவுதியில் மது அருந்தினால் சவுக்கடி என்பது பெரும்பாலும் சிறை தண்டனைகளால் மாற்றப்பட்டிக்கிறது.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான அரசு, தற்போது ஆட்சி செய்து வருகிறது. இளவரசர் முகமது பின் சல்மான் ,

எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பி சவூதி அரேபியா இருக்கக்கூடாது என்று நினைத்தார். மேலும் வேலைவாய்ப்பை பெருக்கும் நோக்கில் வணிக தளங்கள், சுற்றுலா தளங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்பினார்.

அதன்படி பொருளாதாரத்தை மேம்படுத்த விஷன் 2030′ எனப்படும் திட்டங்களை இளவரசர் முகமது பின் சல்மான் முனைப்போடு செயல்படுத்தி வருகிறார்.

அதன் ஒருபகுதியாக இளவரசர் முகமது பின் சல்மான், தலைநகர் ரியாத்தில் முதல் மதுபானக் கடையைத் திறக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

சவூதி அரேபியா அரசாங்கம் கொண்டுவர உள்ள இந்த மதுக்கடை தான் அந்த நாட்டின் முதல் மதுக்கடையாகும்.

இந்த மதுக்கடையில், முஸ்லிம் அல்லாத வெளிநாட்டுத் தூதர்களுக்கு மது விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு சார்பிலான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரபல செய்தி நிறுவமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த புதிய திட்டத்தின் படி, முஸ்லிம் அல்லாத வெளிநாட்டுத் தூதர்கள் மதுவைப் பெறவேண்டுமென்றால், அவர்கள் மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும்.

அதுவும் எப்படி என்றால், மது வாங்குவதற்கு என்றே உருவாக்கப்பட்டிருக்கும் சவூதி வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து, அனுமதிக் குறியீட்டைப் பெற்று, மொபைல் செயலி மூலம் பதிவுசெய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் வாங்கும் பொருட்களுடன் மாதாந்திர ஒதுக்கீட்டை மதிக்க வேண்டும் என்று ஆவணத்தில் கூறப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இஸ்லாத்தில் மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளதால்,  முஸ்லீம் நாடாக திகழும் சவூதி அரேபியாவில் சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளில் மதுக்கடையை திறக்கும் இந்த நடவடிக்கை ஒரு மைல்கல் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே மதச்சார்பற்ற சுற்றுலா, இசை நிகழ்ச்சிகள் மற்றும் திரையரங்குகளுக்கு அனுமதி, பெண்களை வாகனம் ஓட்ட அனுமதித்தல், தளவாட மையங்களை உருவாக்குதல் போன்றவற்றை முகமது பின் சல்மான் அனுமதித்துள்ளார்.

சவூதி அரேபியா நாட்டில் வசிப்போருக்கு வேலைவாய்ப்பினை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

புதிய மதுக்கடை ரியாத்தில் தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள அதிகம் வசிக்கும் சுற்றுப்புறத்தில் அமையப் போகிறது.

இந்த மதுக்கடையில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு தூதர்களுக்கு மட்டுமே மது வழங்கப்படும் என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மற்ற முஸ்லீம் அல்லாத வெளிநாட்டினர் கடையில் மது வாங்க முடியுமா என்பது தெளிவாக தெரியவில்லை.. பல லட்சம் வெளிநாட்டவர்கள் சவூதி அரேபியாவில் வாழ்கின்றனர், ஆனால் அவர்களில் பெரும்பாலோனார் இந்தியா உள்ளிட்ட ஆசியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் எகிப்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கிறார்கள். வரும் வாரங்களில் கடை திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...