சிவில் உடையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்!

Date:

பொலிஸ் அதிகாரிகள் சிவில் ஆடையில் கடமையில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் பரிசோதனை செய்வதற்காக வாகனங்களை நிறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என தெரிவித்து , தான் புதிய ஆலோசனைகளை பெற்றுக்கொடுத்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபா் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளாா்.

அந்த ஆலோசனை பட்டியல் நேற்று (19) பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளாா்.

நேற்று முன்தினம் (18) நாரம்மல பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரியொருவரினால் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சாரதியொருவர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த புதிய ஆலோசனைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டாா்.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...