துறைமுக அதிகாரசபை ஏற்பாட்டில் 50 எம்.பிகள் கப்பலில் இன்ப சுற்றுலா!

Date:

துறைமுக அதிகாரசபையின் இரண்டு சிறிய கப்பல்களில் 50க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு துறைமுகத்தில் உல்லாச சுற்றுலா ஒன்றில் ஈடுபட்டிருந்ததாக தெரிய வருகிறது.

துறைமுக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் வேண்டுகோளுக்கு இணங்க ஒதுக்கப்பட்ட இரண்டு கப்பல்கள் மூலம் இந்த இன்ப சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுவிற்கு உணவு மற்றும் ஏனைய பானங்கள் துறைமுக அதிகாரசபையால் வழங்கப்பட்டுள்ளன.

புத்தாண்டின் ஆரம்பத்தை முன்னிட்டு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பு துறைமுக வளாகத்தில் ஒரு குறுகிய கப்பல் சுற்றுப் பயணத்தை ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதில் பங்கேற்குமாறும் துறைமுக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர விடுத்திருந்த அழைப்பு கடிதத்தின் பிரகாரம் இந்த எம்.பிகள் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

மூலம்: இணையம்

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...