மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலக குழுவினருக்கும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதிநிதிகளுக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று நெற்று 5ஆம் திகதி மாலை 05:00 மணி தொடக்கம் மாலை 06:30 மணி வரை சம்மேளன கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது.
அந்தவகையில், இனநல்லிணக்கத்தினை மேம்படுத்துவதற்கான பல்வேறு காத்திரமான விடயங்கள்
கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கு தடையாகவுள்ள பல்வேறு அம்சங்களும் உதாரணங்களுடன் தெளிவுபடுத்தப்பட்டது.
அத்தோடு காத்தான்குடி பிரதேச மற்றும் அதனைச் சூழவுள்ள பொது மக்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகள் மற்றும் சவால்களை நிவர்த்திப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன், எதிர்காலத்தில் அமையப் பெறவுள்ள இவ் ஆணைக்குழுவின் சட்டவரைபில் உள்ளீர்க்க வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
மேற்படி, அமர்வில் உண்மை நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலக குழுவின் பணிப்பாளர் கலாநிதி. சட்டத்தரணி. அசங்க குணவர்தன, அதனது கொள்கை பிரிவு தலைவர் யுவி தங்கராஜா மற்றும் சிரேஷ்ட அதிகாரியொருவரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.