2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது.
புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் போது அதிகரித்துள்ள வற்வரி அதிகரிப்பு தொடர்பில் பெற்றோருக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சங்கத்தின் தலைவர் லலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், புதிய பெறுமதி சேர் வரி (VAT) திருத்தம் அமுல்படுத்தப்படுவதால் வாகன உதிரிபாகங்கள் மற்றும் எரிபொருளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.