போர் நடக்கும் நிலையிலும் இஸ்ரேல் நாட்டில் வேலை: ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்கள் ஆர்வம்

Date:

காஸாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதலை தொடங்கியதிலிருந்து இஸ்ரேலில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை தேர்வு செய்யும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, ஹரியாணா அரசு, இஸ்ரேலில் உள்ள 10,000 பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரங்களை கடந்த டிசம்பரில் வெளியிட்டது.

தச்சர்கள், பீங்கான் டைல்ஸ் ஒட்டுநர்கள், மேஸ்திரிகள், உருக்காலை தொழிலாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு மாத சம்பளம் ரூ.1.37 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.

இதற்காக 6 நாட்கள் நடைபெறவுள்ள ஆட்சேர்ப்பு முகாமில் ஒடிசா, பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இது போல் வெளிநாடு செல்ல விரும்புபவர்களில் ஒருவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அங்கித் உபாத்யாய். அவர் ஒரு முகவருக்கு பணம் செலுத்தி, விசா பெற்று, குவைத்தில் ஸ்டீல் ஃபிக்ஸராக எட்டு ஆண்டுகள் பணியாற்றிய போது தொற்று நோய் பொதுமுடக்கத்தின் காரணமாக தனது வேலையை இழந்தார்.

“எனக்கு எந்த பயமும் இல்லை. நான் இஸ்ரேலில் வேலை செய்ய விரும்புகிறேன். அங்குள்ள ஆபத்துகளை நான் பொருட்படுத்தவில்லை. வீட்டில் வேலை பாதுகாப்பு இல்லை,” என்றார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...