மதீனா நகரில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி: வலுக்கும் விமர்சனங்கள்

Date:

சவூதி அரேபியாவில், இஸ்லாமியர்களின் புனித நகரமான மதீனாவுக்கு இந்திய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பயணம் மேற்கொண்டார். இது குறித்த புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

இந்நிலையில் மகளிர் விவகாரத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை புனித நகரமான நபிகள் நாயகம் பள்ளிவாசல் மற்றும் குபா மசூதி முற்றங்களில் நுழைய அனுமதித்ததற்கு சமூக வலைதளங்களில் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்திய மாடல் மற்றும் நடிகை,ஆளும் பாஜக அரசின் அமைச்சரான இவர் முஸ்லிம்கள் மீதான தீவிர விரோதப் போக்குடையவர் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஸ்மிருதி இரானியுடன் வெளியுறவு இணையமைச்சர் முரளீதரன் ஆகியோர் அரசு முறைப்பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ளனர். அங்கு ஹஜ் பயணம் தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாட்டு அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.

பிறகு, இஸ்லாமியர்களின் புனித நகரமான மதினாவுக்கும்,   ஸ்மிருதி இரானி சென்றார்.

அங்கு சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சரும், மக்கா மசூதியின் துணை ஆளுநருமான சவுத் பின் மஷால் பின் அப்துல் அஜீசுடன் ஸ்மிருதி இரானி ஆலோசனை மேற்கொண்டார்.

ஹஜ், உம்ரா பயணங்களின் போது இந்தியப் பயணிகளுக்குத் தேவையான சேவைகளை மேம்படுத்துவது குறித்தும் இரு நாடுகளின் ஒருங்கிணைப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

சவூதி  அரசு அதிகாரிகள், ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.

புகைப்படத்துடன் அவர் வெளியிட்ட பதிவில், மதினாவிற்கு வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தை மேற்கொண்டேன். அல் மஸ்ஜிதுன் நபவி மசூதி, உஹுத் மலை, இஸ்லாமிய வரலாற்றில் முதல் மசூதியான குபா மசூதிக்கும் சென்றேன்.

ஆரம்பகால இஸ்லாமிய வரலாற்றோடு பின்னிப் பிணைந்த சவூதி அதிகாரிகளின் மரியாதையுடன் இந்த இடங்களுக்கு சென்றதன் முக்கியத்துவம், நமது கலாச்சார மற்றும் ஆன்மீக ஈடுபாட்டின் ஆழத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இவ்வாறு அந்த பதிவில் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

இதனை பார்த்து, நெட்டிசன்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் பரவலான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...