மருத்துவமனைக்குள் மாறு வேடத்தில் நுழைந்து 3 பாலஸ்தீனியர்களைக் கொன்ற இஸ்ரேல் இராணுவம்!

Date:

பலஸ்தீன மருத்துவமனை ஒன்றில் மாறுவேடங்களில் நுழைந்த இஸ்ரேலிய இராணுவத்தினர் அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த பலஸ்தீனியர்கள் 3 பேரைச் சுட்டுக் கொன்றனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆரம்பித்த இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் உலகையே உலக்கியுள்ளது.

தொடர்ந்து போரினால் நிகழ்ந்த கொடுமைகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், ஹமாஸ் குழுவினரை ஒழிக்க இஸ்ரேல், பலஸ்தீன காசா பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திவருகிறது.

அதன் தொடர்ச்சியாக, இஸ்ரேலிய இராணுவ படையினர் பலிஸ்தீனியர்களைத் தேடி காசாவில் மேற்கு கரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் உள்ள இப்ன் சினா மருத்துவமனைக்குள் மாறுவேடங்களில் நுழைந்துள்ளனர்.

நர்சுகள், ஹிஜாப் அணிந்த பெண்கள், நோயாளிகள் போல வேடமிட்டு மருத்துவமனைக்குச் சென்ற அவர்கள் ஆடைகளுக்குள் ஆயுதங்களையும் மறைத்து எடுத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையின் மூன்றாம் தளத்திற்குச் சென்ற அவர்கள், அங்கு சிகிச்சை பெற்று வந்த பலஸ்தீனியர்கள் 3 பேரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.

கொல்லப்பட்ட மூன்று பேரும் பலஸ்தீன இராணுவத்தின் ஜெனின் ப்ரிகேட்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் என ஹமாஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மொஹம்மெட் ஜலாம்னெஹ் என்ற முக்கிய நபரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தியதாகவும் ஆனால், அந்த அமைப்புடன் தொடர்பு இல்லாத சகோதரர்கள் இருவரும் இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்டனர் என்றும் இஸ்ரேல் கூறுகிறது.

இந்த தாக்குதலை தொடர்ந்து ஜெனின் நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பலஸ்தீன சுகாதார துறை ஐ.நா.வின் பொதுச்சபையிடம் கோரிக்கை வைத்துள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...