பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா தனது உடை தொடர்பான நடைமுறைகளை மீறியமைக்காக பாராளுமன்ற அறைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஷான் விஜயலால் சமையற்காரர்கள் அணியும் உடை அணிந்து வந்திருந்ததாக சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
“ஏன் அந்த உடையில் வந்தீர்கள் என கேட்டதற்கு, தம்மிடம் கருப்பு சட்டை மற்றும் கால்சட்டை எதுவும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
அனைத்து ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்று கருப்பு உடையில் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்,”