வட காஸாவுக்கான மருத்துவ உதவிகளை நிறுத்தியது உலக சுகாதார நிறுவனம்!

Date:

வடகாஸாவுக்குள் மருத்துவ உதவிகளை அனுப்பவிருந்த உலகச் சுகாதார நிறுவனம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரப்படாத காரணத்தால் அதை நிறுத்தியுள்ளது.

அந்த மருத்துவ பொருட்கள் அல்அவ்தா மருத்துவமனைக்கும், மற்றொரு மருந்தகத்திற்கும் கொண்டு செல்ல இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகாஸாவுக்குள் மருத்துவ உதவிகளைக் கொண்டு செல்ல முடியாமல் போவது இது நான்காவது முறையாகும். வடகாஸாவுக்கு உதவிகள் சென்று 12 நாட்கள் ஆகிறது.

கடுமையான வெடிகுண்டுத் தாக்குதல்கள், நடமாட்டக் கட்டுப்பாடு ஆகியவற்றுடன் தெளிவான தகவல்கள் இல்லாத காரணத்தால் ஊழியர்களின் பாதுகாப்புக் கருதி இந்த முடிவை எடுத்ததாக உலக சுகாதார நிறுவனம்  தகவல் வெளியிட்டது.

5 மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவப் பொருட்களை ஜனவரி 7ஆம் திகதி அனுப்ப திட்டமிடப்பட்டதாக நிறுவனம் தெரிவித்தது.

சரியான நேரத்திற்கு மருத்துவ உதவிகள் கிடைக்காவிட்டால் வடகாஸாவில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் செய்வது அறியாது பொதுமக்கள் கலங்கி நிற்கின்றனர்.

Popular

More like this
Related

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...