இந்தியா சென்றதால் பிரதான அரசியல் தலைவர்கள் அச்சமடைந்துள்ளனர்: அனுர

Date:

இந்தியாவுக்குச் சென்று கலந்துரையாடியமையால் பிரதான  அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் அச்சமடைந்திருப்பதாக   மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய அவர் தமது இந்திய பயணம் தொடர்பில் ஆதரவாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

இந்திய விஜயத்தின்போது பல விடயங்கள் குறித்து நாங்கள் அவதானம் செலுத்தினோம். அதன்போது, நாட்டின் வளங்களை தாரைவார்க்க ஒத்துழைப்பு வழங்குவதாக நாங்கள் குறிப்பிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமைய இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தேன். இந்திய விஜயம் குறித்து சஜித் பிரேமதாஸ, மஹிந்த ராஜபக்ஸ, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தரப்பினர் கலக்கமடைந்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள். அதனைக் கண்டு நாங்கள் கலக்கமடையவில்லை என்றும் குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாசவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முரண்பாடு இருப்பதால் இருவரும் ஒன்றுசேர முடியாது.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா, சஜித் போன்ற தலைவர்கள் ஒரே மேடைக்கு வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

இந்தியா அழைத்து பேசியதால் அச்சமடைந்துள்ள இந்த அரசியல் தலைவர்கள் ஜே.வி.பியை ஓரம் கட்டுவதற்காக ஒரேமேடைக்கு வருவார்கள் என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பியின் வளர்ச்சியாலும் வல்லரசு நாடுகள் அழைப்பதாலும் அச்சமடைந்துள்ள சிங்கள தலைவர்களால் தமக்கு எதிராக மேலும் பல அதிசயங்கள் இலங்கைத் தீவு அரசியலில் நடக்கக்கூடும் என்றும் அவர் எதிர்வு கூறினார்.

இந்தியாவைக் கையாள தங்களால் தான் முடியுமென இந்த தலைவர்கள் இதுவரைக் காலமும் நம்பியிருந்தனர்.

ஆனால், இப்போது அது ஜே.வி.பியினாலும் முடியுமென்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்பதையும் அவர் விபரித்தார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...