காதி நீதிமன்றங்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் முஸ்லிம் திருமண மற்றும் மணநீக்க சட்டத்தின் பிரயோகம் மற்றும் நீதிபதிகளின் கடமைகளும் பொறுப்புக்களும் என்ற தலைப்பில் இலங்கையின் அனைத்து காதி நீதிபதிகளுக்குமான செயலமர்வு கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதன் போது முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் A.W.A.சஸாம், மேல் நீதிமன்ற நீதிபதி லக்மால் விக்ரமசூரிய, மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி M.மிஹால், கௌரவ மூதூர் மாவட்ட நீதிபதி தஸ்லீம் பானு , ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, கௌரவ காதிகள் சபை முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி நட்வி பஹவூடீன், இலங்கை காதி நீதிபதிகளின் சங்க தலைவர் M.இபாம் எஹியா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

