உத்தரகண்ட் ஹல்த்வானி வன்முறை: 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்!

Date:

உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் நடந்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60 பேர் காயம் அடைந்த நான்கு நாட்களுக்குப் பின்னர், பன்பூல்பூரா பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானியில் காவல் நிலையம் அருகே மதரஸா  செயல்பட்டு வருகிறது.

இங்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமிய குழந்தைகள் மார்க்கக்கல்வி பயின்று வந்தனர்.

இந்த நிலையில்,  அந்த மதரஸா கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறி,  அதனை நகராட்சி அதிகாரிகள்  இடித்து தரைமட்டமாக்கினர்.

இதற்கு அப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் பொலிஸார்ஊரடங்கு உத்தரவை விதிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது.

கலவரக்காரர்களை கண்டதும் சுட்ட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. ஹல்த்வானி வன்முறையில் பன்புல்புராவில் இதுவரை 6  பேர் உயிரிழந்துள்ளனர்.  100க்கும் மேற்பட்ட காயமடைந்துள்ளனர்.

சட்டம் ஒழுங்கை பராமரிக்க ஹல்த்வானியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நகரத்தில் இணைய சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் அப்பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளது.  பன்புல்புரா பகுதியில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொலிஸார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...