‘எந்த வேலைத்திட்டமும் இல்லை’: மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானம்!

Date:

ஆசிரியர் – அதிபர் சங்கங்கள், சம்பள முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் அதிபர் பதவி உயர்வுகள் தொடர்பாக எந்த வேலைத்திட்டமும் இல்லை. அவர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர்.

ஆசிரியர் பதவியில் இருந்து அதிபர் வரை செல்லும் போது சம்பளம் குறைக்கப்படுகிறது, ஒட்டுமொத்த கல்விமுறை பிரச்சனைகள் குறித்து கல்வி அதிகாரிகள் கவனம் செலுத்துவது இல்லை.

எனவே  இவ்வாறான காரணங்களை வலியுறுத்தியே  குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது” இவ்வாறு ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...