ஐக்கிய அரபு அமீரக எக்ஸ்போ கண்காட்சியில் பங்கேற்பதற்கு இலங்கை வணிகங்களுக்கு அழைப்பு!

Date:

Sri Lanka RAK -2024’ கண்காட்சி ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் 16-20 வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் படி, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) ராசல் கைமா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் (RAK CCI) இணைந்து இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

சர்வதேச தரத்திலான இலங்கை பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் இலங்கை நிறுவனங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் எக்ஸ்போ சென்டரில் கண்காட்சிக்காக காட்சிக்கூடங்களை அமைக்க அனுமதிக்கப்படும்.

விநியோகம் மற்றும் முதலீடுகள் உட்பட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை நிறுவனங்களுக்கு மொத்தம் 240 காட்சிக்கூடங்கள் வழங்கப்படவுள்ளன.

ஐந்து நாள் கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் இலங்கை வணிக நிறுவனங்கள் 2024 பெப்ரவரி 28 அல்லது அதற்கு முன்னர் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இக்கண்காட்சியில் கலந்துகொள்ளும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த இலங்கையர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் ஆகியோருக்கு விமான டிக்கெட்டுகள் மற்றும் தங்குமிடங்களுக்கான சலுகைக் கட்டணங்கள் வழங்கப்பட உள்ளன.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...