கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரி மீது தாக்குதல்: பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம்

Date:

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற மேன்முறையீட்டு சபை கூட்டத்தில்   திணைக்கள அதிகாரி ஒருவர்  ஆசிரிய சங்க உறுப்பினரால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் ஊழியர்கள் இன்று குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆசிரிய இடமாற்றம் தொடர்பிலான மேன்முறையீட்டுச்சபை கூட்டம் கூடப்பட்ட பேது, அதில் பிரதிக் கல்விப் பணிப்பாளருக்கும் ஆசிரியர் சேவை சங்க உறுப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பேது, கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரி , ஆசிரிய சங்க உறுப்பினரால் தாக்கப்பட்டதோடு அதிகாரி ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

அதனை கண்டிக்கும் முகமாகவே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் விடயம் தொடர்பிலான மகஜர் ஒன்று கிழக்கு மாகாண கல்வித் திணைக்களச் செயலாளரிடம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...