குறிவைத்து தாக்கும் இஸ்ரேல்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Date:

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துவரும் நிலையில், இஸ்ரேலானது தரைவழித் தாக்குதலை ரஃபா நகரில் நடத்தப்போவதாக அறிவித்ததிலிருந்து, காஸா மீதான குண்டுவீச்சுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகின்றது.

மத்திய காசாவில், குடியிருப்பு பகுதியில் குண்டு வெடித்ததில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் வெளியாகாத நிலையில் தான், தெற்கு கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனையைச் சுற்றி, இஸ்ரேலிய படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஸ்னைப்பர் தாக்குதல்களில் 21 பலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்தோடு மருத்துவமனையின் மேற்கூரையில் திரண்டிருந்த இளைஞர்கள் குழுவையும் தாக்க இஸ்ரேலிய ட்ரோன்கள் குறிவைத்துள்ளன. குடும்பத்தினருடன் தகவல் தொடர்பை மேற்கொள்ள முயன்ற குழுவினரே இவ்வாறு குறிவைக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களினால் இதுவரையில் காஸாவில் 27,947 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...