ஜனநாயக அடக்குமுறை; சிவில் அமைப்புகள் விலகல்: ஜனாதிபதிக்கு பகிரங்க கடிதம்!

Date:

சிவில் சமூககத்தை குறிவைக்கும் அடக்குமுறை மற்றும் ஜனநாயகமற்ற சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமை (OGP) செயல் முறையிலிருந்து சிவில் சமூக அமைப்புகள் விலகுவதாக இன்று (09) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளன.

இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பகிரங்க கடிதமொன்றையும் இந்த அமைப்புகள் அனுப்பியுள்ளன.

இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமையின் நிகழ்ச்சித் திட்டத்துடன் தொடர்புடைய மூன்றாவது தேசிய செயற்திட்டத்தினை (NAP) தயாரிப்பதில் பங்களிக்கும் சிவில் சமூக அமைப்புகள் (CSOs) சிவில் கூட்டு முயற்சிகளிலிருந்து விலகுவதற்கு ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளன.

இது அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறிப்பாக நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை (online safety bill) நிறைவேற்றுவது மற்றும் பரவலான எதிர்ப்பையும் மீறி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றிற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சிவில் சமூக வெளியை அடக்குவதற்கும் பொது மக்களின் அடிப்படை சுதந்திர மீறலுக்கும் எதிராக இந்தக் கொள்கை ரீதியான நிலைப்பாட்டிற்கு எம்மை நிர்ப்பந்தித்துள்ளதாக இந்த அமைப்புகள் அறிவித்துள்ளன.

இந்த முடிவானது குழுவாக தீர்க்கமான முறையில் பரிசீலிக்கப்பட்ட பின்னர், இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமையின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாக நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆபத்தான முன்னெடுப்புகளுக்குப் பதிலளிக்கும் விதமாக எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளன.

இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமையின் சிவில் சமூக அமைப்புகளின் இணைப்பாளர்கள் என்ற வகையில், ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (Transparency International -TISL) மற்றும் சர்வோதய ஷ்ரமதான இயக்கம் (Sarvodaya Shramadana Movement) இந்த கூட்டு முடிவை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளாதாக தெரிவித்துள்ளன.

இந்த அமைப்புகள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம் பின்வருமாறு,

திறந்த அரசாங்க பங்குடைமை (OGP) என்பது அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், குடிமக்களை மேம்படுத்துதல், பொது பிரச்சினைகளில் பொது மக்களின் பங்களிப்பை உறுதி செய்தல் மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல பங்குதாரர்களின் முயற்சியாகும்.

தற்போது, 70 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பெருகி வரும் உள்ளூர் அரசாங்கங்கள் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

ஆயிரக்கணக்கான சிவில் சமூக அமைப்புக்கள் திறந்த அரசாங்க பங்குடைமையின் (OGP) உறுப்பினர்களாக உள்ளன.

திறந்த அரசாங்க பங்குடைமையின் (OGP) கீழ், சிவில் சமூகத்துடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் நல்லாட்சிக்கான முன்முயற்சிகளை செயல்படுத்துவதற்கு, பங்குபெறும் அனைத்து நாடுகளும் பல பங்குதாரர்கள் செயல்முறையின் மூலம் இரண்டு ஆண்டு தேசிய செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

இலங்கை 2015 முதல் திறந்த அரசாங்க பங்குடைமையில் (OGP) அங்கத்துவம் பெறுவதன் மூலம் சர்வதேச ரீதியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

அதன் பின்னர், இரண்டு தேசிய செயற்திட்டங்கள் தயாரிக்கப்பட்டன, ஆனால் அவற்றை செயல்படுத்துவதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...