ஜனாதிபதி மற்றும் இஸ்ரேல் அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு: இஸ்ரேல்-ஹமாஸ் குறித்தும் பேச்சு

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகேவ் (Brig. Gen. Miri Regev)  ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது ஹமாஸ் போராளிகளால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களை மீளக் கொண்டுவருவதற்கு இலங்கையின் ஆதரவை இஸ்ரேல் எதிர்பார்ப்பதாகவும்  காஸா பகுதியில் இடம்பெறும் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பலஸ்தீன அரசை அமைப்பதற்கு இலங்கை ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் சர்வதேச உறவுகளின் பணிப்பாளர் தினுக் கொழம்பகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...