ஜனாதிபதி ரணிலின் ஆட்சியின் கீழ் நாட்டின் மொத்த கடன் தொகை 28இ095 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு!

Date:

இலங்கை மத்திய வங்கி வாராந்தம் வெளியிடும் பொருளாதார புள்ளிவிபரங்களுக்கு அமைய கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தினால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது, அரசின் மொத்த கடன் தொகையானது 24 ஆயிரத்து 671 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் அந்த கடன் தொகையானது 28 ஆயிரத்து 95 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 15 மாத கால ஆட்சியின் கீழ் நாட்டின் மொத்த கடன் தொகையானது 3 ஆயிரத்து 424 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.

அத்துடன் கடந்த வருடத்தின் முதல் 11 மாதங்களின் வரவு செலவுத்திட்டத்தின் துண்டு விழும் தொகையானது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நவம்பர் வரையான 11 மாதத்தில் வரவு செலவுத்திட்டத்தின் துண்டு விழும் தொகையானது ஆயிரத்து 601 பில்லியன் ரூபாவாக இருந்ததுடன் கடந்த 2023 ஆம் ஆண்டின் 11 மாத காலத்தில் வரவு செலவுத்திட்டத்தின் துண்டு விழும் தொகையானது 2 ஆயிரத்து 20 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதனை தவிர வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், 5 ஆயிரம் மில்லியன் டொலர் மேலதிக கடன் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் வாராந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...