ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் நாற்பெரும் விழா நிகழ்வுகள்!

Date:

பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் 50ஆவது ஆண்டு நிறைவையொட்டிய பொன்விழா நிகழ்ச்சித் தொடரின் மற்றுமொரு வரலாற்று நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.45 மணிக்கு ஜாமிஆ நளீமிய்யா கலாபீட மாநாட்டு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

ஜாமிஆ நளீமிய்யா கலாபீட நிர்வாக சபையும் ராபிததுந் நளீமிய்யீன் பேருவளை வலயமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

விசேட அதிதியாக நளீமிய்யா பரிபாலன சபைத்தலைவர் யாகூத் நளீம் மற்றும் கௌரவ அதிதியாக கலாபீட முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.எஸீ அகார் மொஹமட் நளீமி ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

நிகழ்வில் நளீமிய்யாவின் ஜம்பதாண்டு நிறைவையொட்டிய நினைவு முத்திரை வெளியீடு,நளீமிய்யா உருவாக்கத்திற்கு நளீம் ஹாஜியாருடன் இணைந்து உழைத்த ஸ்தாபகர்களை கௌரவிக்கும் ஸ்தாபகர் தினம் நளீமிய்யாவின் உருவாக்க வரலாற்று நூல் வெளியீடு நளீமிய்யா உருவாக்கத்திற்கு நளீம் ஹாஜியாருடன் இணைந்து உழைத்த ஸ்தாபகர்களை கௌரவிக்கும் ஸ்தாபகர் தினம் நளீமிய்யாவின் உருவாக்க வரலாற்று நூல் வெளியீடு மற்றும் நளீமிய்யா கலாபீடத்துக்கான  சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டமும் இந்நிகழ்வின் போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...