நிர்ணயிக்கப்பட்ட நிறைக்கு ஏற்ப பாண் விற்பனை செய்யாத வர்த்தகர்களை கண்டறிய விசேட சோதனை!

Date:

நுகர்வோர் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், நிர்ணயிக்கப்பட்ட நிறைக்கு ஏற்ப பாண் விற்பனை செய்யாத வர்த்தகர்களை கண்டறிவதற்கு விசேட சோதனை நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாணின் நிகர எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை அண்மையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அத்துடன், பாண் ஒன்றின் நிகர எடையை விட 13.5 கிராம் வித்தியாசம் காணப்படலாம் என குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அரைவாசி பாணின் நிகர எடை 225 கிராம் எனவும், அதில் 9 கிராம் வித்தியாசம் காணப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...