பாரிய தொழிற்சங்க நடவடிக்கை விரைவில்?

Date:

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் எதிர்வரும் 20 ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

கல்வித்துறையில் நிலவும் பிரச்சனைகள் தொடர்பாக நேற்று (16) அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்யந்த், மாகாண ஆளுநர்கள் மற்றும் கல்வி தொழிற்சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சந்திப்பில் மாகாண கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலைக் கட்டிடங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்கள் சூட்டப்படுவதை நிறுத்துமாறு தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

Popular

More like this
Related

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...