பிரித்தானிய மன்னர் சார்லஸ்க்கு புற்று நோய் பாதிப்பு!

Date:

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

75 வயதான மன்னர், சமீபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அறுவை சிகிச்சைக்காக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று வெளியான தகவலில், மன்னருக்கு மேற்கொள்ளப்பட்ட உடற் பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதற்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

சிகிச்சையில் இருக்கும் காலப்பகுதியில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்குமாறு வைத்தியர்களால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சிகிச்சை கால கட்டத்தில் அரசு பணிகள் மற்றும் ஆவண பணிகளை வழக்கம் போல் மேற்கொள்வார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...