பேருந்துகளில் பெண்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் தொடர்பில் அறிவிக்க அவசர இலக்கம்

Date:

பொது போக்குவரத்து சேவைகளில் பெண்களிடம் தகாத முறையில் நடந்துக் கொள்பவர்களுக்கு எதிராக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இரகசியமான முறையில் கெமரா பொறுத்தப்பட்ட சிவில் உடை அணிந்த காவல்துறை உத்தியோதகத்தர்கள் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் பெண்களுக்கு பொது போக்குவரத்துகளில் இடையூறு ஏற்படுத்துவோர் தொடர்பில் அறிவிப்பதற்கு 109 எனும் அவசர இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

காவி உடையை தவறாக பயன்படுத்தியமைக்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!

புனிதமான காவி உடையைத் தவறாகப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போலியான...

உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆவணங்கள் திரட்டும் நடவடிக்கை

கண்டி, உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 1939- 2026 வரையான காலப்பகுதியில்...

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை...