மக்களை மௌனமாக்கும் இணையவழிப் பாதுகாப்புச் சட்டம்:மார்ச் 12 இயக்கம்

Date:

மக்களை மௌனமாக்குவதற்காகவும் மக்களின் கருத்துக்களை ஒடுக்குவதற்காக இணையவழிப் பாதுகாப்புச் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது.

இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் மூலம் அடிப்படை உரிமைகளிற்கு மிகவும் ஆபத்தானது என்பதையும் இலங்கையின் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஜனநாயக கொள்கைகளிற்கு ஆபத்தானது என்பதையும் நாங்கள் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் தற்போதைய அரசாங்கம் இந்த சட்டமூலத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதில் காண்பிக்கும் முயற்சி மிக முக்கியமான பொருளாதார சீர்திருத்த மற்றும் எதிர்வரும் தேர்தல் காலங்களில் கருத்து வேறுபாடுகளை கொண்டவர்களை மௌனமாக்கும் சிவில் செயற்பாடுகளை ஒடுக்கும் அரசாங்கத்தின் நோக்கங்கள் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றன.

இதேவேளை அதிகரித்துவரும் வாழ்க்கை செலவு சமாளிக்க முடியாத  மக்கள் மத்தியில் மௌனமாக துயரத்தை அனுபவிக்கும் அதேவேளை, ஆட்சியாளர்கள் இந்த மௌனம் கீழ்படிதல் என கருதக்கூடாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...