அமெரிக்காவில் டிக்டொக், மெட்டா செயலிக்கு வழக்கு: இளைய சமூகத்தை அழிப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு செனட் விசாரணையில் மன்னிப்பு கேட்ட மெட்டா நிறுவனர் மார்க்

Date:

அமெரிக்காவில் 5 ஆயிரம் பெற்றோர் இணைந்து சமூக ஊடகமான டிக்டொக் மெட்டா நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

டிக்டொக் சமூக ஊடகத்தை இந்த பெற்றோர் இலத்திரனியலின் மிகப்பெரிய புகையிலை எனக்கூறியுள்ளனர்.

மிக முக்கியமான வழக்காக கருதப்படும் இந்த வழக்கில் டிக்டொக் செயலி, அமெரிக்காவின் இளைய சமூகத்தை அழித்து வருவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

13 முதல் 19 வயதான இளையோர் மற்றும் இளைஞர்களின் மனநலத்தின் மீது டிக்டொக் தளம் கொண்டுள்ள தாக்கம் குறித்து பெற்றோர் பலர் கவலை தெரிவித்து வரும் நிலையில், 5 ஆயிரம் பெற்றோர் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கு அனைவரது கவனத்தையும் திருப்பியுள்ளது.

இளைய சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த தாக்கத்திற்கு டிக்டொக் செயலியை உருவாக்கிய சீன நிறுவனமான ByteDance பொறுப்புக்கூற வேண்டும் என பெற்றோர் கூறியுள்ளனர்.

தொடர்ச்சியான பயன்பாட்டு தூண்டுதல் காரணமாக டிக்டொக் செயலி கணிசமான தீங்கை ஏற்படுத்துவதாக வழக்கை தாக்கல் செய்துள்ள கெல்வின் கூட் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை செய்து கொள்வது போன்ற பதிவுகளின் மூலம் இளம் சமூதாயத்தின் மீது டிக்டொக் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

உலகின் முன்னணி சமுக வலைதளமான இன்ஸ்டாகிராம் மற்றும் மெட்டா (முன்னர் ஃபேஸ்புக்) நிறுவனர், மார்க் ஜுக்கர்பெர்க் (39).

நேற்று, சமூக வலைதளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் தாக்கம் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல் சம்பந்தமான வீடியோக்கள் குறித்து அந்நிறுவனங்களின் மீது பலர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளின் மீது அமெரிக்க செனட் விசாரணை நடத்தியது.

இதில் ஜுக்கர்பெர்க் நேரில் பங்கேற்று தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார்.

விசாரணை தொடங்கியதும் ஊடகங்களில் குழந்தைகள் மீதான தாக்குதல் குறித்த வீடியோவை விசாரணைக்குழு ஒளிபரப்பியது. இதில் பல உயிரிழப்பு சம்பவங்கள் குறித்தும் நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டன.

குடியரசு கட்சியின் செனட்டர் ஜோஷ் ஹாவ்லி (Josh Hawley), ஜுக்கர்பெர்கை நோக்கி, “உங்கள் வலைதள உள்ளடக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா?” என கேட்டார். அப்போது, ஜுக்கர்பெர்க் எழுந்து நின்று கொண்டு அக்குடும்பத்தினரை நோக்கி பேசினார்.

நீங்கள் அனைவரும் அனுபவித்த கொடுமையான துன்பங்களுக்கு நான் வருந்துகிறேன். உங்கள் குடும்பங்கள் அனுபவித்த துயரங்கள் வேறு எவருக்கும் வர கூடாது. என்னை மன்னியுங்கள். இவ்வாறு ஜுக்கர்பெர்க் கூறினார்.

சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த நிறுவனங்கள் பொறுப்பேற்கும் வகையில் ஒரு சட்டம் வரையறுக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக அமெரிக்க அரசு முயன்று வருகிறது.

இது குறித்து பல வலைதளங்களின் நிறுவனர்கள் செனட் சபைக்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் விவாதம் நடத்தி கருத்துகள் கேட்கப்படுகின்றன.

மெட்டா அதிபர் மட்டுமின்றி, டிக்டாக், ஸ்னாப், எக்ஸ் மற்றும் டிஸ்கார்ட் ஆகிய நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் செனட் சபை விசாரணையில் பங்கேற்றனர்.

அவர்கள் செனட்டின் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி உறுப்பினர்களால் சுமார் 4 மணி நேரங்களுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டனர்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...