இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க மற்றும் அவரது குழுவினர் குஜராத்தில் உள்ள அமுல் பால் நிறுவனத்தின் உற்பத்தி செயல்முறைகளை நேற்று (08) பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது பால் உற்பத்தியை அதிகரித்தல், பால் உற்பத்திகளின் விலைகளை குறைத்துக்கொள்ளல், உற்பத்தி வினைத்திறனை மேம்படுத்துதல், தொழில்நுட்பத்தின் உச்ச அளவிலான பாவனை போன்ற விடயங்கள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், அவர்களால் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் பற்றியும் தற்போது தோன்றியுள்ள சிக்கல்கள் மற்றும் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய பல்வேறு சிக்கலான நிலைமைகள் பற்றியும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் முகாமைத்துவ குழுவினரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.