இன்றைய மரக்கறி விலைப் பட்டியல்!

Date:

நுவரெலியாவில் கடந்த காலங்களில் பேசும் பொருளாக மாறியிருந்த மரக்கறி வகைகளின் விலை உயர்வு இப்போது படிப்படியாக குறைந்து வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன் 2000 ரூபாவுக்கு அதிகமாக விலை உச்சம் கொண்டிருந்த கரட் இன்று அருவடை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கிலோ ஒன்றுக்கான விற்பணை விலை 360 ரூபாவாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேநேரத்தில் (முட்டை கோஸ்) பச்சை கோவாவின் விலை கரட்டின் விலையை விட அதிகரித்து வருகின்றதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அத்துடன் மேல் நாட்டு சமையலுக்கு பாதிக்கப்படும் சிவப்பு கோவாவின் விலை உச்சம் கண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நுவரெலியாவிலிருந்து வெளி மாவட்ட பொது சந்தைகளுக்கு விற்பணைக்கென தினமும் அதிகமாக கொண்டு செல்லப்படும் மரக்கறிகளின் மொத்த விலையினை நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில்……

கரட் 360 ரூபாய், கோவா 375 ரூபாய், லீக்ஸ் 215 ரூபாய், ராபு 70 ரூபாய், உருளை கிழங்கு 290 ரூபாய், பீட்ரூட் 180 ரூபாய், இலை வெட்டப்பட்ட பீட்ரூட் 225 ரூபாய் நோக்கோல் 370 ரூபாய் என விற்பணை விலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சிவப்பு கோவா 3200 ரூபாவாகவும், புரக்கோலின் விலை 2100 ரூபாவாகவும் மொத்த விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...