இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவுக்கு வருகிறதா? ஹமாஸ் அமைப்பு முன்வைத்துள்ள விடயங்கள்!

Date:

இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினரின் துப்பாக்கிகள், பீரங்கிகள், போர் விமானங்கள், ஏவுகணைகளுக்கு ஓய்வு கொடுக்கும் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது.

கடந்த நான்கு மாதங்களாக நடந்து வரும் போர் முடிவுக்கு வருகிறதோ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ஹமாஸ் அமைப்பு முன்வைத்துள்ள விடயங்கள். முன்னதாக அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் சார்பில் மத்தியஸ்தம் செய்யும் வகையில் கத்தார், எகிப்து நாடுகள் நேரடியாக ஹமாஸ் அமைப்பினரை சந்தித்து பேசி வருகின்றனர்.

கடந்த வாரம் நடந்த பேச்சுவார்த்தையில் சில விடயங்கள் ஹமாஸ் அமைப்பினரிடம் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு பதில் என்னவென்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்தது. நேற்று இரவு இஸ்ரேல் வந்த அமெரிக்க செக்ரடரி ஆஃப் ஸ்டேட் ஆன்டனி பிலிங்கென், போர் குறித்து முக்கியமான விடயங்களை ஆலோசித்தது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ள பதிலில்,

மூன்று கட்டங்களாக போர் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

அதுவும் 45 நாட்கள் இடைவெளியில் மேற்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. முதல் கட்டத்தில் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து அனைத்து பலஸ்தீனிய பெண்கள், குழந்தைகள் விடுவிக்கப்பட வேண்டும்.

இதற்கு பதிலாக காஸாவில் உள்ள பெண் பணயக் கைதிகள், 19 வயதுக்கு உட்பட்டவர்கள், முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை விடுவிக்கப்படுவர். இரண்டாம் கட்டத்தில் எஞ்சிய ஆண் பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவர்.

மூன்று கட்ட செயல்பாடுகள்

மூன்றாம் கட்டத்திலும் பணயக்  கைதிகள் பரிமாற்றம் நடைபெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் இறுதியில் இருதரப்பும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முன்வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர இஸ்ரேல் படைகள் முழுவதுமாக வெளியேற வேண்டும். இறந்தவர்களின் உடல்களும் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக காஸாவில் மறுகட்டமைப்பு பணிகள் தொடக்கப்படும் எனத் தெரிகிறது. இத்தகைய நடவடிக்கைகள் போரை முடிவுக்கு கொண்டு வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி போரின் தொடக்கமாக இருந்ததே ஹமாஸ் அமைப்பினர் தான் என்பதை நினைவு கூற வேண்டியுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகள் மீது நிலம், நீர், ஆகாயம் என மும்முனை தாக்குதலை ஹமாஸ் அமைப்பினர் அதிரடியாக தொடுத்தனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று...

ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

-முஹம்மத் பகீஹுத்தீன் இஃதிகாப் என்றால் என்ன? பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை...