புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏறாவூர் நகர பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் இன்று 18 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு இளைஞர்கள்,யுவதிகள் மற்றும் சிறார்களுக்கான கராத்தே பயிற்சி நெறி வகுப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஒரு வருட கால எல்லையை கொண்ட இப்பாட நெறியில் மாகாண,தேசிய கராத்தே போட்டிகள் மற்றும் சர்வதேச கராத்தே பயிற்சி நெறிக்கு மாணவர்களை பங்குபற்ற செய்வதோடு பயிற்சி நெறி இறுதியில் புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் பெறுமதியான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலதிக தகவல்களுக்கு
M.I.M.M.மஹ்பூழ்
நிலைய பொறுப்பதிகாரி
பிரதேச கலாசார மத்திய நிலையம், ஏறாவூர்
0776226621
குறிப்பு
சென்செய் நுஸ்ரான்