கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் நினைவு பேருரை 17ம் திகதி!

Date:

அமரர் டாக்டர் ஏ.எம்.ஏ. அஸீஸ் நினைவஞ்சலிக் கூட்டம் மற்றும் நினைவுச் சொற்பொழிவு  எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.45 க்கு கொழும்பு 10 ஒராபி பாஷா மாவத்தை, இல 406 இல் அமைந்துள்ள சாஹிரா கல்லூரியின் கஃபூர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

‘இலங்கை முஸ்லிம், தமிழ்த் தலைவர், செனட்டர் அஸீஸின் உரைகளில் சட்டமும் அதன் நிகழ்கால முக்கியத்துவமும்’ என்ற தலைப்பில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர் எம்.சொர்ணராஜா உரை நிகழ்த்தவுள்ளார்.

சர்வதேச திட்ட ஆலோசகர் கேப்டன் ஏ.ஜி.ஏ. பாரி மற்றும் கொழும்பு டைம்ஸ் ஆசிரியர் எம்.சி. ரசூல்தீன் இந்தக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர்.

கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் அறக்கட்டளையின் தலைவர் காலித் எம்.ஃபாரூக் மற்றும் அகில இலங்கை வைஎம்எம்ஏ மாநாட்டின் தேசிய தலைவர் இஹ்சான் ஏ.ஹமீட், ஆகியோர் நிகழ்வுக்கு இணைத் தலைமை தாங்குவர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...