கள்-எலிய பட்டதாரிகள் ஒன்றுகூடல்: ஊர் அபிவிருத்திக்கு கற்றோரின் பங்களிப்பைப் பெறுவதற்கான முன்மாதிரிமிக்க நிகழ்வு!

Date:

‘அருளும் அபிவிருத்தியும் அடைந்த எமதூர்’ எனும் தலைப்பில் கடந்த 03ம் திகதி கள்-எலிய பட்டதாரிகளின் ஒன்றுகூடல் நிகழ்வொன்று நடைபெற்றது.

கள்-எலிய பெரிய பள்ளிவாசலான அல்-மஸ்ஜிதுஸ் ஸூப்ஹானியின் வேண்டுகோளுக்கு அமைய கள்-எலிய ஊர் அபிவிருக்காக தோற்றுவிக்கப்பட்ட CORE- 07 எனும் திட்டமிடல் குழு இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியது.

முன்னாள் அதிபர் எம்.எச்.எம். காமில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 100 பட்டதாரிகள் பங்குபற்றினர்.

எம்.எச். நஸால் (B.Eng) அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமான நிகழ்வில், தலைமையுரை முன்னாள் அதிபர் அல்ஹாஜ் எம்.எச்.எம். காமில் அவர்களாலும், அல்-மஸ்ஜிதுஸ் ஸூப்ஹானி சார்பாக அதன் செயலாளர் ஜனாப் எம்.ஆர்.எம் பாயிஸ் (முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்) அவர்களால் ஆசி உரையும் நிகழ்த்தப்பட்டன.
மேலும் ‘சமூக அபிவிருத்தியில் கற்றோரின் பங்களிப்பு எனும் தலைப்பில்’ ஜாமிஆ நளீமிய்யாவின் சிரேஸ்ட விரிவுரையாளரும் கல்வித் துறைப் பணிப்பாளருமான அஸ்ஸேய்க். எஸ்.எச்.எம் பழீல் (நளீமி) அவர்களின் விசேட உரையொன்றும் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது, ஆன்மீகம், கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், நல்லிணக்கம் மற்றும் குடும்ப அமைப்பு ஆகிய 06 தலைப்புக்களில் பட்டதாரிகள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு குறித்த தலைப்புக்களில் ஊரிலுள்ள பிரச்சினைகள் அதற்கான மூல காரணங்கள் மற்றும் தீர்வுகள் ஆராயப்பட்டன.
நிகழ்வின் இறுதியில் கள்-எலிய பட்டதாரிகள் சங்கம் உத்தியோகபூர்வமாக நிறுவப்பட்டு அதன் தலைவராக முன்னாள் அதிபர் காமில் அவர்களும் உதவித் தலைவராக முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் (தமிழ் பிரிவு) திருமதி ஹரூபா அஸ்ஹர் அவர்களும் செயலாளராக ஆசிரிய ஆலோசகர் அஸ்ஸேய்க். எம்.எச்.எம் புகாரி (நளீமி) அவர்களும் பொருளாலராக ஹிமாஸ் நிஸவ்ஸ் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
அத்தோடு சங்கத்தின் நிர்வாகக் குழுவிற்கு மேலும் 07 அங்கத்தவர்களும் 06 அபிவிருத்திக் குழுக்களுக்கான இணைப்பாளர்களும் உப இணைப்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
நிகழ்வுகளை மேர்சி கல்வி வளாகத்தின் தொழில்நுட்ப, தொழில் கல்விப் பகுதி அதிபரும் முகாமையாளருமான ஷிஹாம் கரீம், அஹ்மத் முன்ஸிப் (Bsc), மள்வானை முஸ்தபா மஹா வித்தியாலய அதிபர் அஸ்ஸேய்க் சம்ரிஹான் நளீமி மற்றும் எச்.எம்.எம். பஹத் (Bsc) ஆகியோர் நெறிப்படுத்தினர்.

ஒன்றுகூடலின் இறுதியில் அஸ்ஸேய்க்  இஸ்மத் அலி (நளீமி) அவர்களால் கள்-எலிய பட்டதாரிகள் ஒன்றுகூடல் பிரகடனம் வெளியிடப்பட்டது.
ஊரின் அபிவிருத்தியை கற்றோரைக் கொண்டு திட்டமிட்டுச் செயற்படுத்த முனைகின்ற கள்-எலிய அல்மஸ்சூதுஸ் ஸூப்ஹானி, அதற்கு உறுதுணையாகச் செயற்படும் CORE 07 மற்றும் நிகழ்வில் கலந்து பங்களிப்புச் செய்த கள்-எலிய வாழ் பட்டதாரிகள் என்போர் ஏனைய ஊர்களுக்கு முன்னுதாரணமிக்க வகையில் இந்நிகழ்வை நடத்தி முடித்துள்ளமை பாராட்டத்தக்கதாகும்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...