காசாவில் உணவிற்கு கடும் தட்டுப்பாடு; ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொள்ளும் நிலைமை: அரசியல் ஆய்வாளர்கள் வேதனை

Date:

இஸ்ரேல் – காஸா இடையிலான போர் 143வது நாளை எட்டியுள்ளது. ஹமாஸ் படையினரை ஒடுக்க நினைத்து, ஒட்டுமொத்த காஸா பகுதியையும் உருக்குலைத்து வருகிறது இஸ்ரேல் இராணுவம்.

ரஷ்யா – உக்ரைன் போரை விட காஸா மீதான தாக்குதல் மிகவும் கொடூரமாக அரங்கேறி வருகிறது. இதை இனப் படுகொலை என்று சர்வதேச அளவில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

காஸாவின் உள்கட்டமைப்பு வசதிகள் தரைமட்டமாகி வரும் சூழலில் அடிப்படை தேவைகளுக்கு பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு காஸாவில் பல்லாயிரக்கணக்கான பலஸ்தீன மக்கள் பசியுடன் இருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு கிடைக்கவில்லை. விலங்குகள் உண்ணும் உணவை சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதற்கு ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொள்ளும் நிலை காணப்படுகிறதாம். இத்தகைய சூழலை காஸா தனது வரலாற்றில் ஒருபோதும் கண்டதில்லை என அரசியல் பார்வையாளர்கள் வேதனையுடன் பதிவு செய்கின்றனர்.

இந்நிலையில் தங்களது உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ள தெற்கு காஸா பகுதியை நோக்கி புறப்பட்டுள்ளனர்.

போதிய எரிபொருளும் கிடைக்கவில்லை. இதனால் பலர் நடந்தே இடம்பெயர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி காஸா மக்கள் கூறுகையில், வடக்கு பகுதியில் வாழ்வது மிகவும் கடினமாக மாறியுள்ளது. இஸ்ரேல் ராணுவ தாக்குதல்களை எதிர்கொள்ள தயங்கவில்லை. மோசமான அரசியல் சூழலுக்கு அஞ்சவில்லை. எங்களால் பசியை தாங்க முடியவில்லை.

https://twitter.com/UNRWA/status/1762064318558842961?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1762064318558842961%7Ctwgr%5Ef1a9bc2bfd6f6e95202157e33f9f9a13097a9b58%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Flatest-news%2Finternational-news%2Fhungry-palestinians-from-north-to-south-gaza-to-seeking-food-amid-israel-war%2Farticleshow%2F108012461.cms

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...