எகிப்திய பழ விற்பனையாளர் ஒருவர் தனது கடையில் விற்பனைக்கு வைத்திருந்த தோடம்பழங்களை காசாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவி டிரக் மீது போடும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியுள்ளது.
பல மாதங்களாக காசாவில் சொல்ல முடியாத துயரங்களுக்கும் வேதனைகளுக்கும் உள்ளாகியுள்ள காசா மக்களுக்கு பல்வேறு நாடுகளும் மக்களும் உதவி செய்துகொண்டு வருகின்றார்கள்.
அந்தவகையில் எகிப்து நாட்டில் ஜுசா என்ற நகரத்திலிருந்து காசா மக்களுக்கு ஏராளானமாக கண்டெய்னர்களில் நிவாரணப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
அதற்கமைய கடந்த வியாழக்கிழமை வீதியோரமாக பழ வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரி ஒருவர் தானும் உதவிகள் செய்யவேணடும் என்ற உணர்வு மேலோங்கியதால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பழங்களை வீதியில் நிவாரணப்பொருட்களுடன் சென்று கொண்டிருந்த வாகனம் மீது பழங்களை தூக்கி போடும் காட்சி எல்லோர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த காட்சியை பார்த்த செல்வந்தர் ஒருவர் சாதாரண வியாபாரியின் மனிதாபிமான உணர்வை கண்டு புனித மக்கா நகரம் சென்று வரும் வாய்ப்பை வழங்குவதாக அவருக்கு உறுதியளித்தார்.
இதன்போது குறித்த பழ வியாபாரி கூறுகையில், ‘குண்டு தாக்குதலுக்கு ஆளானவர்கள் உணவு மற்றும் தண்ணீரைக் கூட பெற முடியாது தவித்து வருகின்றார்கள், என் இதயம் வலிக்கின்றது. அதனால் தான் என்னால் முடிந்த பழங்கள் அனைத்தையும் கொடுக்க விரும்பினேன் அவை தேவைப்படும் மக்களைச் சென்றடையும் என்று கூறினார்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் விளைவாக காசா உணவு, மருந்து, பிற அடிப்படைப் பொருட்களுக்கான கடுமையான பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச உதவி நிறுவனங்கள் கூறுகின்றன.
பலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேல் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கு உணவு, ஆக்சிஜன், மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காசா மக்கள் உணவு இன்றி பசி பட்டினியோடு வாழ்வது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
காசாவின் மனிதாபிமான அவலம் எந்தளவு தூரம் மக்களுடைய உள்ளங்களில் ஆழமான பாதிப்பை ஏற்பாடுத்தியுள்ளது என்பதற்கு இந்த சம்பவம் மிகச்சிறந்த உதாரணமாகும். ஆகவே மனிதாபினமானத்துக்கு நாம் எப்போம் ஆதரவளிப்போமாக…!
❤️ This Egyptian fruit seller saw an aid convoy heading to Gaza so he picked his best oranges and threw them into the trucks so they would reach the people in need.
These are the people of faith.
In an interview with Al Jazeera Egypt, he said: "My heart goes to those people… pic.twitter.com/94h8AApxQw
— • (@Alhamdhulillaah) February 17, 2024