சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதற்காக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்த தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது எக்ஸ் தளத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.
இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்தவின் கருத்துக்கு சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில்,ஊடகப் பேச்சாளர் தனது பதவியை இராஜினாமா செய்ததோடு, தனது கருத்துக்காக பகிரங்கமாக மன்னிப்பும் கோரியுள்ளார்.
சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தேவை ஏற்பட்டால் குப்பி விளக்குகளைப் பயன்படுத்தி மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என நோயல் பிரியந்த தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.